×

ரிஷப் - இங்ரம் சிறப்பாக ஆடியும் 152 ரன்னில் சுருண்டது டெல்லி கேப்பிடல்ஸ்

மொகாலி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், 167 ரன் எனும் எளிய இலக்கை துரதிர்ஷடவசமாக எட்ட முடியாமல் டெல்லி அணி தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கிங்ஸ் லெவன் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், சாம் கரன் களமிறங்கினர். ராகுல் 15 ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), சாம் கரன் 20 ரன் (10 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். பஞ்சாப் அணி 7.1 ஓவரில் 58 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் சர்பராஸ் கான் - டேவிட் மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 62 ரன் சேர்த்தது. சர்பராஸ் கான் 39 ரன் (29 பந்து, 6 பவுண்டரி) விளாசி லேமிஷேன் பந்துவீச்சில் ரிஷப் பன்ட் வசம் பிடிபட்டார்.
அடுத்து மில்லருடன் மன்தீப் சிங் இணைந்தார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மில்லர் 43 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மோரிஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கிங்ஸ் லெவன் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன் குவித்தது. 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லியின் பிரித்வி ஷா, ஷிகார் தவான் ஜோடி களமிறங்கினர். அஷ்வினின் முதல் பந்திலேயே லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஷா அவுட்டானார். தவானுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். 7.2வது ஓவரில் ஹர்துஷ் பந்து வீச்சில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஐயர், க்ளீன் போல்ட் ஆனார். ரிஷப் பன்ட் அடுத்து ஆட வந்தார். 9.2வது ஓவரில் 30 ரன்கள் எடுத்திருந்த தவான், அஸ்வின் பந்து வீச்சில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். அடுத்து கொலின் இங்க்ரம் களமிறங்கினார். பந்த்தும், இங்க்ரமும் பொறுப்பாக ஆடி அணியை 142 ரன்களுடன் வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். பந்த் 2 மற்றும் இங்க்ரம் 1 சிக்ஸ் அடித்திருந்தனர். கடைசி 9 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. எனினும் அடுத்தடுத்து விக்கெட் சரியத் தொடங்கி 19.2 ஓவரில் டெல்லி அணி ஆல் அவுட் ஆகி தோற்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rishap - Delhi Capitals ,bowler , Rishabh, Ingram, Delhi Capitals, IPL
× RELATED ஐசிசி நம்பர் 1 டெஸ்ட் பவுலரானார் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின்!!