பஹ்ரைன் கிராண்ட் பிரீ ஹாமில்டன் அபார வெற்றி

சாஹிர்: பஹ்ரைன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். பஹ்ரைன் சர்வதேச சர்க்யூட் பந்தயக் களத்தில் நடைபெற்ற பிரதான சுற்றில் (57 லேப்), ஹாமில்டன் 1 மணி, 34 நிமிடம், 21.295 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன. சக மெர்சிடிஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் (+2.980 விநாடி) 2வது இடமும், பெராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க் (+6.131 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.

ரெட் புல் ரேசிங் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+6.408 விநாடி), பெராரி அணி நட்சத்திரம் செபாஸ்டியன் வெட்டல் (+36.068 விநாடி) அடுத்த இடங்களைப் பிடித்தனர். இதுவரை நடந்துள்ள 2 பந்தயங்களின் முடிவில் மெர்சிடிஸ் வீரர்கள் போட்டாஸ் (44 புள்ளி), ஹாமில்டன் (43 புள்ளி) முன்னிலை வகிக்கின்றனர். நடப்பு சீசனின் 3வது பந்தயமாக சீன கிராண்ட் பிரீ தொடர் ஏப்ரல் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி நிறைவடைகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hamilton ,Bahrain Grand Prix , Hamilton, Bahrain Grand Pre
× RELATED அண்ணன் உடையான் வெற்றிக்கு அஞ்சான்!