×

டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இந்தியா ஹாட்ரிக்

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி சாம்பியன்ஷிப் விருதை, விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 3வது ஆண்டாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான டெஸ்ட் சீசன் மார்ச் 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை இந்தியா தொடர்ந்து 3வது ஆண்டாக கைப்பற்றி அசத்தியது.  

விருதுடன் இந்திய அணிக்கு ரூ.6.92 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்படும். நியூசிலாந்து அணி (108 புள்ளி) 2வது இடத்தையும், தென் ஆப்ரிக்கா (105) 3வது இடத்தையும் பிடித்தன. இந்த அணிகளுக்கு முறையே ரூ.3.46 கோடியும், ரூ.1.38 கோடியும் கிடைக்கும். 4வது இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.69 லட்சம் வழங்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test cricket championship ,India , Test cricket, championship, India, hat trick
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...