×

முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலிடம்: அரசியல் வல்லுனர்கள் அதிர்ச்சி

கர்நாடகாவின் மண்டியா மக்களவை தொகுதியில் நிகில் குமாரசாமியை வெற்றி பெற வைக்கும் நோக்கில் அவரது வரிசை எண் ஒன்று என்பதை முதல்வர் குமாரசாமி அறிவித்தது அரசியல் வல்லுனர்கள்  இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மண்டியா மக்களவை தொகுதியில் முதல்வரின் மகன் நிகில் குமாரசாமி மஜத வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை முதல்வர் குமாரசாமி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை பணிய வைத்து தனது மகனுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மார்ச் 25ம் தேதி நிகில் குமாரசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அன்று மண்டியாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி பேசுகையில், ‘‘எனது மகன் நிகில் குமாரசாமியின் வரிசை எண் ஒன்று. அனைவரும் வேட்பாளர் பட்டியலில் உள்ள வரிசை எண் ஒன்றில் நிகில் குமாரசாமிக்கு வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார். வேட்பு மனுத் தாக்கல் முடிந்த பின்னர், வேட்பு மனு பரிசீலனை, இதை தொடர்ந்து, வேட்பு மனு வாபஸ் பெறுவது, பின்னர்தான் இறுதியாக வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், நிகில் குமாரசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்த நாளன்றே தனது மகனின் வரிசை எண்ணை அறிவித்தது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அத்துடன், நிகில் குமாரசாமி பிரசாரம் செய்யும்போது மின்தடை ஏற்படுவதில்லை. ஆனால், சுமலதா அம்பரீஷ் பிரசாரம் செய்யும் போதும், முதல்வர் குமாரசாமி மீது குற்றச்சாட்டை செய்தியாளர்களிடம் கூறும்போதும் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வேட்பாளர் பெயர் பட்டியலில் நிகில் குமாரசாமியின் பெயர் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான பாஜ பலத்த எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ள நஞ்சுண்டசாமி மாநில தேர்தல் அதிகாரியிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் தனது பெயர் தான் முதலில் வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோல் சுயேச்சையாக போட்டியிடும் நடிகை சுமலதாவும் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. சுமலதாவுக்கு போட்டியாகவும், வாக்குகள் கிடைப்பதை தடுக்கும் வகையிலும் சுமலதா என்ற பெயர் கொண்டவர்கள் 3 பேர்களை குமாரசாமி களத்தில் இறக்கியிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Nikhil ,Kozhikode ,experts , CM Kumaraswamy son, Nikhil, polling machine,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...