×

ராஜஸ்தானில் மாறும் காட்சிகள்

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் மக்களவை தேர்தலில் தங்களுக்குதான் அதிக சீட் கிடைக்கும் என்ற ஆசையில் பாஜவினர் இருந்தனர். கடந்த டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 39.3% வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. பாஜ ெபற்ற வாக்குகள் 38.8%. இந்த வாக்குவித்தியாசத்தை மோடி செல்வாக்கால் மாற்றி, கடந்த 2014 தேர்தலைப்போல 25 எம்,.பி தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜ தலைவர்கள் கனவு கண்டனர். இதற்கேற்றார்போல காங்கிரசும் ஆரம்பத்தில் வேட்பாளர் தேர்விலேயே தடுமாறியது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் தாமதமாகவே  வெளியானது. ஆனால், கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து நடைபெறும் திருப்பங்கள் பாஜவினரை திகைக்க வைத்துள்ளது. வெற்றி நிச்சயம் என்று நினைத்தவர்கள் தலையில் கையை வைத்துக் ெகாண்டு உட்கார்ந்து விட்டனர்.

ராஜஸ்தான் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான அசோக் கெலாட், துணை முதல்வரான சச்சின் பைலட் ஆகியோரின் பிரம்மாஸ்திரம்தான் இந்த திடீர் அரசியல் மாற்றத்துக்கு காரணம். 12 சுயேச்ைச எம்.எல்.ஏக்கள் அதிரடியாக காங்கிரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும் பாஜ முன்னாள் அமைச்சர், பகுஜன் தலைவர்கள் என்று பலர் காங்கிரசில் இணைந்துள்ளனர். இந்த அதிரடி திருப்பத்தை எதிர்பார்க்காத பாஜ செய்வதறியாது திகைத்துபோய் உள்ளது. இந்த திருப்பம் 10 எம்பி தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajasthan , Rajasthan
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...