×

காங்கிரஸ் ஐடி பிரிவின் 687 பேஸ்புக் பக்கம் நீக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவினரின் 687 பக்கங்கள், கணக்குகளை நீக்கி உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தேர்தல் நேரத்தில், போலி கணக்குகள் மூலம், வாக்காளர்கள் மத்தியில் அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக மத்திய அரசு பேஸ்புக் தலைமை அதிகாரியை வரவழைத்து எச்சரித்தது. இதைத் தொடர்ந்து, பேஸ்புக்கில் வெளியாகும் அரசியல் விளம்பரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து பேஸ்புக் நிறுவனம் அதன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து வருகிறது. இந்நிலையில், பேஸ்புக் சைபர் பாதுகாப்பு கொள்கை பிரிவின் தலைவர் நதானியேல் கிளெய்சர் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் ஐடி பிரிவின் 687 பக்கங்கள் மற்றும் கணக்குகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள பதிவு, செய்திகள், உண்மையற்ற தகவல்களை பகிர்ந்ததற்காக அல்ல. அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனிநபரின் அடையாளத்தை மறைத்து செயல்படும் கணக்குகளை பராமரித்தன் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை தானியங்கி முறையில் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவோடு தொடர்புடைவர்களின் தனிப்பட்ட கணக்குகளாகும். இவர்களின் முறையற்ற நடத்தையால், இந்த கணக்குகள் ரத்து செய்யப்பட்டன. ஏனென்றால், எங்களது சேவையை யாரும் தவறாக பயன்படுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress , Congress, IT, Facebook Page
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...