×

பஞ்சாப் ஜனநாயக கூட்டணி சார்பில் பாடகர் ஜஸ்ஸி ஜஸ்ராஜ் சங்ரூரில் போட்டி

பஞ்சாப் ஜனநாயக கூட்டணி சார்பில் பிரபல பாடகரும், நடிகருமான ஜஸ்ஸி ஜஸ்ராஜ் சங்ரூரில் போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநில மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாஜ-அகாலிதளம் கூட்டணி, ஆம் ஆத்மி, பஞ்சாப் ஜனநாயக கூட்டணி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், 13 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பஞ்சாப் ஜனநாயக கூட்டணி சார்பில் சங்ரூர் தொகுதியில் பிரபல பாடகரும், நடிகருமான ஜஸ்ஸி ஜஸ்ராஜ் போட்டியிடுவார் என நேற்று கூட்டணியின் தலைவர் சுக்பால் ஹரா அறிவித்தார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாடகர் ஜஸ்ஸி ஜஸ்ராஜ், ஆம்ஆத்மி சார்பில் பாத்திண்டா தொகுதியில் களம் இறங்கினார். அங்கு, 87 ஆயிரம் வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில் அவர், ஆம்ஆத்மியில் இருந்து விலகி, பஞ்சாப் ஜனநாயக கூட்டணி சார்பில் சங்ரூரில் களம் இறக்கியிருக்கிறார். இதுபற்றி தலைவர் சுக்பால் ஹரா கூறுகையில், “ஜனநாயகத்தை பாதுகாக்க களம் இறங்கியிருக்கிறோம். பிரபல பாடகரும், நடிகருமான ஜஸ்ஸி ஜஸ்ராஜ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jassi Jasraj ,Sangrur ,Punjab Democratic Alliance , Punjab Democratic Alliance, Singer Jassie Jasraj, Sangrur
× RELATED அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர்...