×

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் விவகாரம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த கோவை எஸ்பி மாற்றம்

கோவை: பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்கார விவகாரத்தில் மாணவியின் பெயரை வெளியிட்டதோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் உட்பட 3 பேர் பணியிடம்  மாற்றப்பட்டனர். பொள்ளாச்சியில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் ேகாவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை  வெளியிட்டார். பொள்ளாச்சி டி.எஸ்.பி ஜெயராமன், இன்ஸ்பெக்டர் நடேசன் ஆகியோரின் விசாரணையின் மீதும் பல்வேறு சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல, குற்றவாளிகளுக்கு ஆதரவாக 4 வீடியோக்கள் மட்டுமே  உள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்களை தவிர வேறு குற்றவாளிகள் இல்லை. முக்கியமானவர்களின் மகன்களுக்கு தொடர்பு இல்லை என்று கோவை எஸ்.பி. தெரிவித்தார். இதனால், விசாரணை நடத்துவதற்கு முன்னரே,  குற்றவாளிகளை எஸ்பியே காப்பாற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கிடையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மாணவியின் பெயரை வெளியிட்ட மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஐகோர்ட்  உத்தரவிட்டது.  இதை ெதாடர்ந்து நேற்று கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கோவை மாநகர போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் சுஜித்குமார், கோவை மாவட்ட  எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.  பொள்ளாச்சி டி.எஸ்.பி ஜெயராமனுக்கு பதிலாக நீலகிரி டி.எஸ்.பி சிவக்குமார் நியமிக்கப்பட்டார். பொள்ளாச்சி கிழக்கு பகுதி இன்ஸ்பெக்டர் நடேசன் மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். டி.எஸ்.பி  ஜெயராமன், இன்ஸ்பெக்டர் நடேசன் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியல் செல்வாக்குள்ள சிலருக்கு ஆதரவாக வழக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பாலியல் பலாத்கார வீடியோ வெளியான விஷயத்திலும் விசாரணை சரியாக  நடக்கவில்லை. சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கு மாற்றப்பட்டும் வழக்கு முடங்கியே கிடக்கிறது. எஸ்.பி பாண்டியராஜன் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மற்றும் கோவை பன்னிமடையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட  விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi Girls ,Affair , Pollachi, Students, Sexual, culprits
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...