×

கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ராப் இசை பாடகர் நிப்ரி சுட்டுக்கொலை: எதிரிகள் பற்றி தெரிவித்த சில நிமிடங்களில் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ்:  அமெரிக்காவில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் நிப்சி ஹூலஸ்(33). இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆயத்த ஆடை கடையும் நடத்தி வருகின்றார். இவர் ெவளியிட்ட விக்டரி லேப் என்ற இசை ஆல்பம் இந்த ஆண்டுக்கான சிறந்த  இசை ஆல்பமாக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தனது கடைக்கு வெளியே நின்றிருந்த நிப்சி மீது நேற்று மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான். பலமுறை சுட்டதில் குண்டு பாயந்–்த நிப்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும்  இரண்டு பேர் காயமடைந்தனர்.

நிப்சி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க திரைக்கலைஞர்கள் நிப்தி உயிரிழந்ததற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.கொல்லப்படுவதற்கு முன்பு நிப்சி, டிவிட்டர் பதிவில் தனது எதிரிகள் பற்றி கூறியிருந்தார். பலமான எதிரிகள் இருந்தால், வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றும் அதில் அவர் தெரிவித்திருந்தார். இந்த டிவீட் வெளியிட்ட சில  நிமிடங்களில்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nominee ,Nibry , Grammy Award ,nominated, Rap, Nibry's shotgun,enemies
× RELATED மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை...