×

குஜராத் தலாலா தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: குஜராத் தலாலா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குஜராத் தலாலா சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பராத். இவர் மீதான திருட்டு வழக்கு ஒன்றில், குஜராத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மாதம் 1ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் பராதுக்கு 2  ஆண்டுகள் 9 மாதம் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது. அதே நாளில் இந்த தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பராதுக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி. திருட்டு வழக்கு சிறை தண்டனை  பெற்றதால், எம்.எல்.ஏ பராதுவை தகுதி நீக்கம் செய்த குஜராத் சபாநாயகர், தலாலா சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாகவும் அறிவித்தார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்தில் பராத் கடந்த மாதம் 7ம் தேதி மனு செய்தார். பராதுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு செசன்ஸ் நீதிமன்றம் தடை விதித்தது.

கடந்த மாதம் 10ம் தேதி மக்களவை தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், காலியாக அறிவிக்கப்பட்ட தலாலா தொகுதிக்கும், மக்களவை தேர்தலோடு, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இந்நிலையில், செசன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 15ம் தேதி ரத்து செய்தது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் கடந்த மாதம் 27ம் தேதி பிறப்பித்த உத்தரவில்,  பராதுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்படாததால், தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட மாட்டோம் என கூறிவிட்டது. தகுதி நீக்கம் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பராத் மனு செய்தார். இதை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தலாலா  சட்டப்பேரவை தொகுதி தேர்தலுக்கு தடை விதித்தது. மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gujarat Supreme Court ,Dalai Lax ,Supreme Court ,election , Gujarat, Talala , Elections, Supreme Court, Action
× RELATED விழுப்புரம் சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ....