×

ஆப்பிள்னு வாய்தவறி வந்துட்டுங்க...: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உஷார் பேட்டி

1 உண்மையில் பாமகவுக்கு ஆப்பிள் சின்னமா? இல்லை மாம்பழ சின்னமா?பாமகவுக்கு ஊரறிந்த சின்னம்தான். இரட்டை இலையுடன் கூடிய மாம்பழம்.

2   நிஜமாகவே மறந்து பேசுகிறீர்களா.... இல்லை, மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக இப்படி பேசுகிறீர்களா?நான் பிரசாரம் செய்யும்போது வாய் தவறி ஆப்பிள் சின்னம் என்று வந்து விட்டது.  இதைக் கேட்ட வாக்காளர்கள் பாமக வேட்பாளருக்கு ‘மாம்பழ சின்னம்’ என்று கூறுகிறார்கள். இது சின்னத்தை நன்றாக வாக்காளர்களிடம் பதிய  வைக்கிறது. எனது பிரசார வேலை எளிதாக முடிந்து விடுகிறது.

3 தமிழகத்தில் மோடி பிரசாரம் கூட எடுபடவில்லை. ஆனால் உங்கள் பிரசாரம் பரபரப்பாக உள்ளது. இது யார் கற்று கொடுத்த டெக்னிக்?மோடியால் எந்த ஒரு தமிழனுக்கும் ஆபத்து இல்லை.  ஊழல் இல்லாத ஆட்சியை மோடி தர முடிந்தது.  நமது நாட்டின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளார். மதசார்பின்மைக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்.  மோடியின் பிரசாரம் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. போற்றப்படுகிறது.  தமிழகத்தில் நல்ல திட்டங்களை எடப்பாடி அரசு செய்துள்ளது

4 பாமக போட்டியிடும் 7 தொகுதிகளிலும் என்ன சின்னத்தில் போட்டியிடுகிறது.  நீங்களே முடிவாக சொல்லுங்கள்?பாமக 7 தொகுதிகளிலும் இரட்டை இலையுடன் கூடிய மாம்பழ சின்னத்தில்தான்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dindigul Srinivasan ,interview ,Ushar , Apple, gate , Dindigul Srinivasan ,
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...