×

எடப்பாடியின் பிரசார வேன் மீது செருப்பு வீச்சு: அதிமுக பிரமுகர் கைது

ஒரத்தநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசார வேன் மீது ஒரு வாலிபர் செருப்பை வீசினார். விசாரணை நடத்திய  போலீசார், அதிமுக பிரமுகரான அவரை கைது செய்தனர். தஞ்சை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் பிரசார வேனில் நின்றவாறு நேற்று முன்தினம் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து பேசினார். பிரசார வேனில் முதல்வருடன் தமாகா  வேட்பாளர் நடராஜன், எம்பி வைத்திலிங்கம் நின்றிருந்தனர். அப்போது வேனின் பின்பிறத்தில் இருந்து ஒரு செருப்பு வீசப்பட்டது. இந்த செருப்பு முதல்வர் மீது படாமல் வைத்திலிங்கத்தின் கை மீது பட்டு அப்படியே வேன் மீது  விழுந்தது. இது முதல்வருக்கு தெரியாது.  வைத்திலிங்கமும்  கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். 10 நிமிடத்தில் முதல்வர் பேச்சை முடித்து பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் புறப்பட்டு சென்றார்.இதைதொடர்ந்து  முதல்வரை நோக்கி செருப்பு வீசிய நபரை பிடித்து அதிமுகவினர் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு அந்த நபரை அழைத்து னெ்று போலீசார் விசாரித்தனர். பிடிபட்டவரின் பெயர் வேல்முருகன் (31), உப்புண்டார்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த  கேட்டரிங் பட்டதாரி என்பது தெரியவந்தது. மேலும் அவர் அதிமுக வேட்டி கட்டி இருந்தார். அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய மண்டல் ஐஜி வரதராஜூ,  தஞ்சை டிஐஜி லோகநாதன், எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் ஒரத்தநாடு போலீஸ் நிலையம் வந்து நள்ளிரவு 1 மணி வரை வேல்முருகனிடம் விசாரித்தனர். இதைதொடர்ந்து நேற்று மாலை ஒரத்தநாடு போலீசில் இன்ஸ்பெக்டர்  பாலமுருகன் புகார் செய்தார். அதில் ஆயுதங்களுடன் ஒரத்தநாடு பகுதியில் வேல்முருகன் நடமாடியதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிந்து வேல்முருகனை கைது செய்து கோர்ட்டில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முதல்வருக்கு தடுமாற்றம்
பட்டுக்கோட்டையில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பட்டுக்கோட்டை அழகிரிக்கு  மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் ஏற்கனவே  அழகிரிக்கு மணிமண்டபம், பட்டுக்கோட்டையில்  தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது. இதை கடந்தாண்டு தஞ்சையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு  விழாவில் இவர்தான் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK , Edappadi,propaganda,, AIADMK ,arrested
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...