×

ஒரே மோடி புராணம் நம்ம கட்சியை பாஜவோட இணைச்சுட்டாங்களோ...?மண்டை காயும் அதிமுக தொண்டர்கள்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி பாஜ கட்டுப்பாட்டில் இருப்பதை, பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரங்களில் தெளிவாக உணர முடிகிறது. ஒரே மோடி புராண பேச்சுகளால் அதிமுக தொண்டர்கள் விரக்தி அடைகின்றனர்.  அதிமுக பிரசார களமே மோடி புகழ் பாடுவதாகத்தான் இருக்கிறது.‘மோடி எங்கள் டாடி’, ‘இந்தியாவின் பாதுகாவலன்’, ‘நாட்டை காக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்’ என அமைச்சர்கள் முதல் அதிமுக விஐபிகள் வரை  தங்களது பேச்சில் மோடி புராணம் பாடத்தொடங்கி விடுகின்றனர். 2014ல் நடந்த தேர்தலில் பிரதமர் தேர்வாக கருதப்பட்டவர் ஜெயலலிதா. மோடியா, லேடியா என்றெல்லாம் பிரசாரம் ஓடியது. தற்போது தங்களது பிரசாரத்தில் மோடி அரசின் சாதனைகள் என்று ஒரு பட்டியலை வாசித்துக்  கொண்டிருக்கின்றனர். இதில் அதிமுக அரசின் சாதனைகள் என்று ஒன்றை கூட சொல்லவில்லை என தொண்டர்கள் தரப்பு புலம்புகிறது.

மேலும், தொகுதியில் நிற்கும் வேட்பாளரின் கட்சி சார்ந்தவர்களே சுற்றி நிற்கின்றனர். மற்ற கூட்டணி கட்சிக்காரர்கள் வற்புறுத்தி அழைத்தாலும் வருவதில்லையாம். அதேநேரம் தேர்தல் செலவு என்று ஒரு தொகையை வாங்கிக்கொண்டு, நைசாக எஸ்கேப் ஆகி விடுகிறார்களாம். இதனால் பாஜ அரசின் ஊதுகுழலாக அதிமுக தலைவர்கள் மாறி விட்டனரோ? இந்த புகழாரத்தை பார்க்கும்போது  கட்சியை பாஜவுடன் இணைத்து விட்டார்களோ என சந்தேகம் வருவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi Puranam ,party party , myth, party, Inaiccuttankalo ,AIADA volunteers
× RELATED மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர்...