×

டிரம்ப் பாணியில் குஜராத் பாஜ

குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதியிலும் வெளியூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அந்தந்த மண்ணின் மைந்தர்களையே வேட்பாளராக பாஜ மேலிடம் அறிவித்து வருகிறது. குஜராத்தில் வருகிற ஏப்.23ம் தேதி தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான். மீதியுள்ள 7 தொகுதிகளுக்கும் மண்ணின் மைந்தர்களையே வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க பா.ஜ. ேமலிடம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பா.ஜ. நிர்வாகிகள் கூறியதாவது: கட்சி மேலிடம் கடந்த  தேர்தல்களில் வெளியூர்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் தொகுதியை எட்டிக் கூட பார்ப்பதில்லை. மாவட்ட நிர்வாகிகள் கூட சம்பந்தப்பட்ட எம்.பி.யை தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.

கடந்த தேர்தலில் அகமதாபாத் கிழக்கு தொகுதிக்கு நடிகர் பரேஸ் ராவல் பா.ஜ. வேட்பாளராக போட்டியிட்டு, எம்.பி.யும் ஆகிவிட்டார். ஆனால் அதன் பின்னர் தொகுதிக்கே வரவில்லை. இதனால் அவர் மீண்டும் நிறுத்தப்பட்டால், கட்சி தோற்கக் கூடிய நிலை ஏற்படும் என்று மேலிடத்தில் கூறிவிட்டோம். இதனால் மண்ணின் மைந்தர்களையே நிறுத்தப் போவதாக மேலிட நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் 26 தொகுதியிலும் மண்ணின் மைந்தர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர் என கட்சித் தலைமை உறுதியளித்துள்ளது என்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், மண்ணின் மைந்தர்களுக்கே அமெரிக்க வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார். அவரது பாணியை இப்போது குஜராத் பாஜ பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gujarat Bhajan , Trump, Gujarat, BJP
× RELATED சொல்லிட்டாங்க…