×

சாத்தூரில் பங்குனி திருவிழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

சாத்தூர் : சாத்தூர் மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சாத்தூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் கோயில்கள் உள்ளன. வருடந்தோறும் இக்கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் காப்புக்கட்டுதல், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா, 3ம் நாள் திருவிழாவில் சப்பரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

மறவர் மகாஜன சங்கம் சார்பில் நடந்த நான்காம்நாள் திருவிழாவில் அம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் முன்பு நூற்றுக்கணக்கானோர் நேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, பால் குடம், முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வைப்பாற்றில் இருந்து மாலை 6 மணிக்கு பக்தர்கள் கரகம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் கோயில் வந்தடைந்தனர். காப்பு கட்டிய பக்தர்கள் இன்று அதிகாலை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் விழாவையொட்டி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. மதுரையிலிருந்து சாத்துார் மெயின் ரோடு சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டன. இருக்கன்குடி செல்லும் வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட் வழியாக திருப்பி விடப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : descendants ,Pooja ,festival , Pooja festival, Sathur
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை