×

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு : சிறுமி பலி ; 5 பிஎஸ்எஃப் வீரர்கள் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 5 வயது சிறுமி பலியானார். மேலும் 5 பிஎஸ்எஃப் வீரர்கள் மற்றும் 2 சீவிலியனஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீரில் கடந்த பிப். 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து பிப். 26ம் தேதி அதிகாலை இந்திய விமானப்படை போர் விமானங்கள், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு கூறியது. இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்திவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்தார். இத்தகைய சம்பவங்களால், இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இருந்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்துவது தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து கிருஷ்ணாகாதி, கெர்னி, மன்கோடே, குல்பூர், தேக்வார் ஷாக்பூர், பூஞ்ச் செக்டார்களில் அத்துமீறிய தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட், கிருஷ்ணா காட்டி எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார்  குண்டுகளை வீசியும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் அங்கு கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரும் ஷாபூர் என்ற எல்லையோர கிராமத்தை சேர்ந்த சோபியா(5) என்ற சிறுமியும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தாக்குதலில் 6 வீரர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில்  உள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : army ,Pakistani ,child murders ,Kashmir ,soldiers ,BSF , Poonch District Hospital,Total 5, security personnel got injured
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...