×

சூளகிரி அருகே 2 மாதமாக நிறுத்தப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் சிலைக்காக மாற்றுப் பாதை பணி தீவிரம்

சூளகிரி: சூளகிரி அருகே, சாம்பல்பள்ளத்தில், 2 மாதமாக நிறுத்தப்பட்டுள்ள ராமர் சிலையை பெங்களூருக்கு அனுப்பி வைக்க 3ம்கட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கேதண்டராமர் சிலை அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் பாறை வெட்டி அதில் சிலை தயார் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் சிலை புறப்பட்டது.

இந்த லாரி கடந்த ஜனவரி 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையை அடைந்தது. அங்கிருந்து புறப்படுவதில் பல சிக்கல் ஏற்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி சாமல்பள்ளம் வந்து சேர்ந்தது. அங்கிருந்து புறப்படுவதில் தொடர்ந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கடந்த 2மாதமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 1ம் தேதி) வரை 78 நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  தற்போது தேசிய சாலையில் இருந்து பக்கவாட்டில், மாற்றுப்பாதை அமைக்கும் பணி 3ம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றபின், பிரமாண்ட ராமர் சிலை பெங்களூருக்கு புறப்பட்டுசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramar ,Sulagiri , Sulagiri, Ramar idol, Bengaluru
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் முர்மு இன்று வழிபாடு