×

சீனாவின் இரண்டு போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் ஊடுருவல் : விமானப்படை தயார் நிலையில் இருக்க உத்தரவு!

தைபே : சீனாவின் இரண்டு ஜெட் போர் விமானங்கள் தைவானின் எல்லைக்குள் ஊடுருவியதாக அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது. தைவான் மற்றும் சீனாவை பிரிக்கும் எல்லைப்பகுதியை தாண்டி ஜெ 11 என்ற இரண்டு சீன போர் விமானங்கள் நேற்று காலை ஊடுருவியதாக தைவான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து தைவான் விமானப்படை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊடுருவல் உள்நோக்கத்துடன் கூடிய திட்டமிட்ட தூண்டுதல் என தைவான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை அவ்வப்போது குவித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த 2011ம் ஆண்டில் சீன விமானங்கள் எல்லை தாண்டியதால் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பல முறைகள் சீன விமானங்கள் தைவான் எல்லையில் ஊடுருவியுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு சீன ராணுவத்தின் எச்-6 கே ரக குண்டு வீசும் விமானங்கள் மற்றும் எஸ்யு-35 ரக போர் விமானங்கள் தைவான் நாட்டை சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்த ஒத்திகையால் தைவானில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு நாடுகளிடையே விரிசல் மேலும் அதிகரித்து. இந்நிலையில் மீண்டும் சீனாவின் இரண்டு போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் ஊடுருவியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சீனாவிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் நவீன ஆயுதங்களை இன்னும் அதிகளவில் அமெரிக்கா வழங்க வேண்டும் என தொடர்ந்து தைவான் அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,border ,Taiwan , China, Warplanes, Taiwan border, Air Force
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...