×

காஷ்மீர் புல்வாமா அருகே ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 லஷ்கர் இ தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் புல்வாமா அருகே ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 லஷ்கர் இ தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த இரண்டு மாதமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இருந்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்துவது தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மூன்றாவது நாளாக நேற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறியது.ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுசாராவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் காலை 9  மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச்சூடு ஒரு சில மணி நேரம் நீடித்தது. இந்திய நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. சிறிய ரக வெடிகுண்டுகள், சிறிய ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவமும் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள்  நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகளிடம் இருந்து தூப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் வேறு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : militants ,Kashmir Pulwama , Kashmiri Pulwama, military attack, 4 Lashkar-e-Taiba militant, militants, shot dead
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி