×

ரெய்னா - டோனி பொறுப்பான ஆட்டம்... சூப்பர்கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி

சென்னை: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசியது. சிஎஸ்கே தொடக்க வீரர்களாக அம்பாதி ராயுடு, ஷென் வாட்சன் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த ராயுடு 1 ரன் மட்டுமே எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் பிடிபட, சென்னை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. வாட்சன் 13 ரன் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேதார் ஜாதவ் 8 ரன்னில் வெளியேற, சூப்பர் கிங்ஸ் 4.5 ஓவரில் 27 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா - கேப்டன் டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 61 ரன் சேர்த்தது. ரெய்னா 36 ரன் விளாசி உனத்கட் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து டோனி - பிராவோ ஜோடி ஸ்கோரை உயர்த்த போராடியது. பிராவோ 27 ரன்னில் ஆர்ச்சர் வேகத்தில் குல்கர்னியிடம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் டோனி சிக்சர்களாகத் தூக்கி சென்னை ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.

சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது. டோனி 75 ரன் (46 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரராக ரகானே, பட்லர் களம் இறங்கினர். வந்தவேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ரகானே, ஆட்டமிழக்க, பட்லர், சாம்சன் அவுட்டாக ராஜஸ்தான் அணி 14 ரன்னில் 3 விக்கெட் இழந்து தடுமாறியது. திரிபாதி, ஸ்டீவ் ஸ்மித் ஜோடி ஸ்கோரை 75 ரன்னாக உயர்த்திய போது திரிபாதி அவுட்டானார்.  ஸ்மித் 28 ரன்னிலும் கவுதம் 9 ரன்னிலும் வெளியேற, கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்ட நிலையில்  பிராவோ வீசிய முதல் பந்தில் பென் ஸ்டோக்ஸ் 46 ரன்னில் அவுட்டாக, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணி இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Raina - Dhoni , Raina, Dhoni, chennai Super kings
× RELATED அக்சர் 66, பன்ட் 88*, ஸ்டப்ஸ் 26* கேப்பிடல்ஸ் 224 ரன் குவிப்பு