×

சேலத்தில் டிடிவி தினகரன் பிரசாரம் ‘கல்லா பெட்டியை ஒழிக்க பரிசு பெட்டியோடு வந்துருக்கேன்’

சேலம்: சேலம் தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வத்தை ஆதரித்து சீலநாயக்கன்பட்டியில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை,காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் பசுமையான நிலத்தை அழித்து 8 வழிச்சாலையை கொண்டு வர முதல்வர் பழனிசாமி ஏற்பாடு செய்துள்ளார். கல்வராயன்மலையில் உள்ள  தாதுக்களை தனியார் மூலம் கொள்ளையடிக்கவே இத்திட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. தற்போது பிரசாரத்திற்கு 1000 போலீசாருடன் பழனிசாமி வருகிறார். காரணம், எங்க நீங்கள் எல்லாம் மறித்து விடுவீர்களோ  என்பதற்காக அப்படி வந்து போகிறார். அவருக்கு ஜால்ரா போடும் போலீஸ் அதிகாரிகள் மே 23ம் தேதிக்குப்பின் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் செய்யாத துரோகமே இல்லை. பணத்துக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார்கள். கட்சி தொண்டர்களுக்கு, மக்களுக்கு துரோகம் செய்த பழனிசாமியின் வேட்பாளர்கள்,  டெபாசிட் கூட வாங்கமாட்டார்கள். கல்லா பெட்டி பழனிசாமியை ஒழிக்க நான் பரிசு பெட்டியோடு வந்துருக்கேன். அதுவும் உச்சநீதிமன்றம் சென்று இந்த சின்னத்தை பெற்றுள்ளேன். மோடியா, லேடியா என கேட்ட ஜெயலலிதாவின்  வழியில் ஆட்சி நடத்துகிறோம் எனக்கூறிக்கொண்டு, தற்போது மோடியை எங்க டாடி என்கிறார்கள் வாய் கூசாமல். இவர்கள் எல்லாம் பணம் கிடைக்கிறது என்றால், அந்த பெட்டிக்குள் கூட சென்று படுத்துக்கொள்வார்கள். இந்த தேர்தல் முடிந்ததும், சேலம் மார்க்கெட்டில் பழனிசாமியை பார்க்கலாம். பழைய தொழிலுக்கு வந்துருவாருனு நான் சொல்றேன் இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

ஓட்டுக்கு ₹6 ஆயிரம்ன்னு சொன்னாங்க...
‘ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு முடிந்ததும் மதுரைக்கு விமானத்தில் நான் சென்றேன். அதே விமானத்தில் வந்த அமைச்சர், என்னுடன் வந்த தங்க தமிழ்ச்செல்வனிடம், நாங்க ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தாச்சு. அதனால்,  நிச்சயம் ஜெயிச்சிருவோம் என்று சொன்னார். தேர்தல் முடிவு வந்தபோது, சுயேச்சையாக நான் வெற்றி பெற்றேன். அடுத்து மதுரைக்கு விமானத்தில் நான் சென்றபோது, அந்த அமைச்சர் தனக்கு புக்கிங் செய்த டிக்கெட்டை  கேன்சல் செய்துவிட்டு ஓடிட்டார். இப்பவும் அதேமாதிரி எடப்பாடி, ஓபிஎஸ், எல்லா மணிகளும் பணத்தோட வருவாங்க. அதை பார்த்துக் கொள்ளுங்கள்’ என டிடிவி தினகரன் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TDV Dinakaran ,campaign ,Salem , TDV Dinakaran ,Salem,'Kill ,box
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...