×

அசர செய்யும் அசுர வேக ராக்கெட் விமானம் திட்டம்: டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் செல்லலாம்

துபாய்: உலகின் எந்த ஒரு இடத்தில் இருந்து, அதிகபட்ச தூரத்தில் உள்ள மற்றொரு இடத்துக்கு வெறும் ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடக்கூடிய வகையில், அதிநவீன பயணிகள் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும் என்று முதலீட்டு வங்கி ஒன்று தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் அன்றாடம் ஆச்சரியப்பட வைக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகள் போக்குவரத்தில் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிவேக ரயில்கள், அதிவேக விமானங்கள், மின்னல் வேக ஹைப்பர் லூப் வாகனங்கள் என  உலகம் அதிவேகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அல்ட்ரா பாஸ்ட் ஸ்பேஷ்கிராப்ட் எனப்படும்  அதிவேக பயணிகள் ராக்கெட் விமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பயணிகள் ராக்கெட் விமான திட்டம் செயல்பாட்டுக்கு வர அதிக நாட்கள் ஆகாது என   முதலீட்டு வங்கி நிறுவனமான யுபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் உலக வளர்ச்சி பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகிப்பவர், அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர் எலன் மாஸ்க். தொழிலதிபரான இவர் ஸ்பேஷ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை  நிர்வாகித்து வருகிறார். அவர் கடந்த 2017ல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். சர்வதேச  போக்குவரத்தின் மைல் கல்லாக புதிய திட்டத்தை தன் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். அத்திட்டத்தின்படி, பூமியில் ஒரு  பகுதியிலிருந்து  இன்னொரு பகுதிக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் செல்லும் வகையில் பயணிகளுக்கான ராக்கெட் விமானம் வடிவமைக்கும் திட்டம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இத்திட்டம் செயல்படுத்தபட்டால்   புதிய ராக்கெட் விமானம் அதிகபட்சமாக மணிக்கு 27,000 கிமீ வேகத்தில் செல்லும் டெல்லியிலிருந்து  அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்திற்கு 40 நிமிடத்திலும், லண்டனிலிருந்து  துபாய்க்கு 29நிமிடத்திலும்,  நியூயார்க்கிலிருந்து பாரீசுக்கு 30 நிமிடத்திலும் செல்ல முடியும். இத்திட்டம் எதிர்க்காலத்தில்  செயல்பாட்டுக்கு வரும் எனவும் இதன் மூலம் இவ்வகையான விண்கலம் வான் போக்குவரத்தில் 5 சதவீதம் வரை  இடம் பெறும் எனவும் அச்சமயத்தில் ஒருமுறை பயணிக்க 2 ஆயிரத்து ஐநூறு அமெரிக்க டாலர் (சுமார் ₹1.77 லட்சம்) செலவிலும் செல்ல முடியும் என்ற நிலை உருவாகும். இவ்வாறு யுபிஎஸ் தெரிவித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US , Aurangabad Speed ,Rocket, Flight ,Delhi , US ,40 minutes
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...