இளம்பெண்ணுடன் ஓட்டலுக்கு சென்ற விவகாரம் மேஜர் கோகாய் மீதான ராணுவ விசாரணை முடிந்தது: பதிவு மூப்பு குறைய வாய்ப்பு

புதுடெல்லி: இளம்பெண்ணுடன் ஓட்டலுக்கு சென்று ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட மேஜர் லீதுல் கோகாய் மீதான ராணுவ விசாரணை முடிந்தது. அவருக்கு தண்டனையாக பணிமூப்பு குறைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. காஷ்மீரை சேர்ந்த ராணுவ மேஜர் கோகாய். 2017ல் நகரில் நடந்த மக்களவை இடைத்தேர்தலின்போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. அப்போது ராணுவ ஜீப்பின் முன் இளைஞர் ஒருவரை கட்டி அவரை மனித கேடயமாக  பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர். விசாரணையில் அவரது  விளக்கத்தை ஏற்று, விடுவிக்கப்பட்டார். கடந்த மே 23ம் தேதி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு மேஜர் கோகாய் 18 வயது பெண்ணுடன் சென்றார். அவரை ஓட்டல் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அவரது  ஜீப் ஓட்டுனர் சமீர் மல்லா என்பவரும் ஊழியர்களுடன் தகராறு செய்தார். இந்த சம்பவத்ைத அடுத்து போலீசாரால் கோகாய் கைது செய்யப்பட்டார். தனது விருப்பத்தின் பேரிலேயே மேஜர் கோகாயுடன் சென்றதாக இளம்பெண்  கூறியிருந்தார்.

இதனிடையே மேஜர் கோகாய், சமீர் மல்லா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராணுவ நீதிமன்றம் பரிந்துரை செய்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மேஜர் கோகாய் குறித்து விசாரணை  நடத்தப்பட்டு வந்தது. இதேபோல் உயரதிகாரிகளிடம் தெரிவிக்காமல் சென்றது தொடர்பாக ஓட்டுனர் சமீர் மல்லாவிடம் நடத்தப்பட்டுவந்த விசாரணையும் சமீபத்தில் முடிந்தது. விசாரணையில் பணி நேரத்தில் இல்லாமல்  வெளியேறியது, பணியாற்றும் பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்களிடம் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டது ஆகிய இரண்டு குற்றச்சாட்டையும் இருவரும் ஒப்புக்ெகாண்டனர். இவர்களுக்கான தண்டனை ராணுவ  தலைமையகத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேஜர் கோகாய் பணிமூப்பு குறைய வாய்ப்புள்ளதாகவும், ஓட்டுனர் சமீர்  கடுமையாக கண்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Major Kokai , The issue , hotel ,young lady, Major Coke
× RELATED முதல்வர் எடப்பாடியை விமர்சித்த விவகாரம் சீமான் மீது அவதூறு வழக்கு