×

வருமானவரித்துறையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: வைகோ, முத்தரசன் கண்டனம்

சென்னை: வருமானவரித்துறையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று வைகோ, முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:திமுகவின் முன்னணி தலைவர் துரைமுருகன் இல்லத்திலும், அவரது மகன் கல்லூரியிலும், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலும் சோதனை நடத்துகிறோம் என்று பாஜ தலைமையிலான மத்திய அரசு களங்கம் கற்பிக்கத்  துடிக்கிறது.இது போன்ற ‘ரெய்டு’ நடவடிக்கைகளால் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கலாம் என்ற “மோடி - எடப்பாடி கூட்டணி”யின் வஞ்சகத் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது.நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அரசு நிர்வாக இயந்திரங்கள் தன்னிச்சையாக இயங்க வேண்டிய நேரத்தில், மோடி அரசு எதேச்சதிகாரமாகச் செயல்பட்டு, தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புக்களைத் தூண்டி விட்டு ரெய்டு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது கடும் கண்டனத்துக்கு  உரியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் :பிரதமர் மோடி சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறார். தேர்தல் நேரத்தில் நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளையும்,அதன் தலைவர்களையும், வேட்பாளர்களையும், ஊழியர் களையும், மிரட்டும் வகையில் செயல்படுகிறார்.  பழிவாங்கும், அச்சுறுத்தும் நோக்கிலும், மோடி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சியினருக்கு எதிராக ஏவி விடுகிறார்.அவர் ஒரு காபந்து பிரதமர் என்பதை மறந்து விட்டு, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. மோடி அரசின் இந்த ஜனநாயக  விரோத பாசிசப் போக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gain ,Vaiko ,Muthrasan , income tax ,political , Vaiko, Muthrasan denounced
× RELATED வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ