×

வெளியே செல்லவிடாமல் பூட்டி சிறை வைத்த அதிமுக நிர்வாகிகள் மதுசூதனன் பேச்சை புறக்கணித்த கூட்டணி கட்சிகள்

வடசென்னை அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளின் அவசர ஆலோசனை கூட்டம் ெபரம்பூர் அடுத்த மூலக்கடையில் நடந்தது. பெரம்பூர் பகுதி அதிமுக செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். வட சென்னை நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், பெரம்பூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ராஜேஷ் மற்றும் பாமக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளரான அதிமுக அவை தலைவர் மதுசூதனன் பேச தொடங்கியபோது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவராக எழுந்து சென்றனர். இதனால் கூட்டம் குறையத் தொடங்கியது. உடனே அதிமுக நிர்வாகிகள் திருமண மண்டபத்தின் கதவை மூடி வெளியில் செல்ல முயன்றவர்களை தடுத்தனர். இந்த சம்பவத்தால் கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

 2 நாட்களுக்கு முன்பு வடசென்னை நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் ஓட்டேரியில் நடந்தது. அப்போது, கூட்டணி கட்சியான தமாகா கட்சி தலைவர் படத்தை பேனரில் போடாததாலும், அக்கட்சியினருக்கு உரிய மரியாதை தராததாலும் தமாகா மாவட்ட தலைவர் பிஜுசாக்கோ தலைமையில் கூட்டத்தை புறக்கணித்து கட்சியினர் வெளியில் சென்றனர். கடந்தமுறை நடந்தது போன்று இந்த முறையும் பிரச்னை நடந்துவிடக் கூடாது என கட்சி தலைமை கூறியதன்பேரில், பிஜுசாக்கோவுக்கு உரிய மரியாதை அளித்து மேடையில் அமர வைத்தனர். இருந்தபோதிலும் வடசென்னை பகுதியில் கூட்டணி வேட்பாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்ற புகார் தொடர்ந்து இருந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,executives ,coalition parties ,Madhusudhanan , AIADMK, Madhusudhanan
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...