×

பிரியாணி டேஸ்ட் வேஸ்ட்டா போச்சு!: கேசிஆர் மீது பழிபோடும் வேட்பாளர்

தெலங்கானாவின் செவல்லா மக்களவை தொகுதியல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் கோண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி. அப்பலோ மருத்துவமனை நிறுவனர் பிரதப் ரெட்டியின் மருமகன். தெலங்கானாவில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர் இவர்தான். சொத்து மதிப்பு ரூ.233 கோடி. இவர் பிரசார கூட்டத்துக்கு செல்லும் இடங்களில்  கடந்த சில நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறதாம். இவரது பிரசாரத்துக்கு ஆளும் டிஆர்எஸ் (தெலங்கானா ராஷ்டிரிய சமிதி) கட்சி தடைகளை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. விஸ்வேஸ்வர் ரெட்டி தனது பிரசாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் விமர்சித்து வருகிறார். தெலங்கானாவில் ஜாதி அரசியல் வளர்வதற்கு இவர்கள் இருவரும்தான் காரணம் என கூறும் ரெட்டி, இது தெலங்கானாவின் அடையாளத்தை அழிக்கிறது என குற்றம்சாட்டுகிறார்.

ஆடுகள் மேய்க்கும் சமுதாயத்தினருக்கு மானிய விலையில் ஆடுகள் வழங்கப்படும் என சந்திரசேகர ராவ் உறுதி அளித்துள்ளார். இது குறித்து பேசிய ரெட்டி, ‘‘தெலங்கானாவில் பிரியாணி சுவை ஒரு காலத்தில் மிகவும் அருமையாக இருந்தது. நமது பிரியாணியில் சிறப்பு இன செம்மறி ஆடு பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அதன் சுவை மாறிவிட்டது. இதற்கு காரணம் டிஆர்எஸ் ஆட்சிதான். பக்கத்து மாநிலங்களில் இருந்து ஆடுகளை சந்திரசேகர ராவ் கொண்டு வருகிறார். இதனால்தான் தெலங்கானாவில் பிரியாணி சுவை மறிவிட்டது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Candidate ,Brihanie Tast Vasta Got , KCR, candidate,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்