×

போரூர் ஏரி, மணப்பாக்கம் ஆற்றில் 2 வாலிபர் சடலங்கள் மீட்பு: கொலையா? விசாரணை

சென்னை: போரூர் ஏரிக்கரை முட்புதரில் வெட்டு காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார், இவரை யாரேனும் கொலை செய்தனரா என விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் அடுத்த  மணப்பாக்கம், ஐபிஎஸ் காலனி ஆற்றங்கரையில் வாலிபர் சடலம் கிடப்பதாக  நந்தம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ  இடத்துக்கு வந்து பார்த்தபோது, அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் வாலிபர்  இறந்து கிடந்தார். அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை போலீசார் எடுத்து பார்த்தபோது, இறந்து கிடந்தவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த  டைமண் டிட்டு (27) என தெரியவந்தது. அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை  வைத்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், வாலிபரின்  சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Porur Lake ,Manapakkam River 2 Woman Stones Recovery , Porur Lake, Manapakkam River, murder,
× RELATED மெட்ரோ ரயில் திட்ட பணி காரணமாக போரூர்...