×

எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படும்: திருப்பதியில் இஸ்ரோ அறிவியல் செயலர் பேட்டி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய அறிவியல் செயலர் உமா மகேஸ்வரன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் நாளை(ஏப்.1) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் ராணுவ உளவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் 436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

எமிசாட் செயற்கை கோளுடன் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 29 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது. 3 வெவ்வேறு சுற்று வட்ட பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தும் இந்த ராக்கெட், இஸ்ரோ தலைவர் சிவனின் கனவு திட்டமான உலகில் முதன்முறையாக 4வது கட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதற்காக பிஎஸ் 4 இயந்திரம் இறுதிநிலையில் செல்லும் விதமாக சோலார் பேனல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராக்கெட் உயிர்ப்பிக்கப்பட்டு படிப்படியாக உந்தி தள்ளப்பட்டு 6 மாதங்கள் வரை செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முயற்சியில் இஸ்ரோ, ஐஐஎஸ்டி தயாரித்த 3 சிறிய வகை ஆய்வு சாதனங்களும் விண்ணில் ஏவப்படுகிறது’ இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Embassy ,satellite launch ,ISRO ,scientist ,Tirupati , Emisad, Tirupathi, ISRO, Science Secretary
× RELATED கீழ்ப்பாக்கத்தில் ஆர்மேனியா தூதரகம்...