×

கரூர் மக்களவை தொகுதி காங்.வேட்பாளரை கொல்ல முயற்சி: டிஎஸ்பியிடம் பரபரப்பு புகார்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே வாக்கு சேகரிப்பின் போது கத்தியைக்காட்டி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங். வேட்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அளித்த பேட்டி: அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் 75க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. செல்கிற இடமெல்லாம் பொதுமக்களின் ஆதரவு எங்களுக்கு நல்லமுறையில் இருந்தது. ஒரு கட்டத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் அதிகமாகவே இருந்தது. அரவக்குறிச்சி அருகே லிங்கமநாயக்கன்பட்டியில் வாக்கு சேகரித்தபோது இரண்டு பேர் தகாத வார்த்தைகளில் பேசி என்னையும், திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியையும் வரக்கூடாது என மிரட்டிக்கொண்டே கத்தியைக் காண்பித்து பிரச்னையில் ஈடுபட்டனர்.

என்னிடம் பெண்கள், குழந்தைகள் என பலரும் கை கொடுத்து சகஜமாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென நடந்த இச்சம்பவத்தால் அனைவரும் கலைந்து ஓடினர். எனவே அந்த இடமே பதற்றமானது. பிரச்னையில் ஈடுபட்ட நபர்கள் அந்த ஊரை சேர்ந்தவர்களே இல்லை என்பதை அறிந்து எங்களது ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டோரைப் பிடித்து அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் யார் பொறுப்பு? எனவே என்னை வாக்கு சேகரிக்க விடாமல், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் டிஎஸ்பி அசோகனிடம் புகார் மனு கொடுத்துள்ளோம் என்றார். அதேபோல் எதிர்தரப்பில் திருமூர்த்தி, பெரியசாமி ஆகியோர் அரவக்குறிச்சி போலீசில் கொடுத்த புகார் மனுவில் செந்தில்பாலாஜி உள்பட 10 பேர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,Karur Lok Sabha ,veteran , Karur, Kang. The waitress, trying to kill
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...