×

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எம்.ஐ.ஜி.27 ரகப் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உயிர் தப்பினார்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை எம்.ஐ.ஜி.27 ரகப் போர் விமானம் புறப்பட்டு சென்றது. பயிற்சியின் இடையில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் செங்குத்தாக கீழ்நோக்கி பாய்ந்து சிரோஹி மாவட்டத்தில் உள்ள கோடானா கிராமத்தில் ஒரு வயல் வெளியில் விழுந்து நொறுங்கியது. போர் விமானம் தரையில் மோதுவதற்குள் அதில் இருந்த விமானி பாரசூட் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினார்.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் ஒன்பதாவது முறையாக பயிற்சியின் போது போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன என கூறப்படுகிறது. அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் இல்லை என கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajasthan ,Jodhpur , MIG - 27, pilot, crashed,Jodhpur, Rajasthan
× RELATED லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து...