×

அரியலூரில் தேர்தல் அதிகாரி மதுபோதையில் வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு: தேர்தல் அதிகாரி மீது வழக்குப்பதிவு

அரியலூர்: அரியலூரில் தேர்தல் பார்வையாளரான ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மதுபோதையில் வானத்தை நோக்கி சுட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் தேர்தல் பணிக்காக அரியலூர் மாவட்டத்திற்கு வந்து சுற்றுலா விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை இவர் மதுபோதையில் இருந்ததால் அவருடைய உதவியாளர் துப்பாக்கியை வாங்கி 9 முறை வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய உதவியாளர் புகார் கொடுத்ததால் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட எஸ்.பி சீனிவாசன் மற்றும் பெரம்பலூர் எஸ்.பி ஆகியோர் விசாரணை செய்ததில் உண்மையை ஒப்புக்கொண்டதால் ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பார்வையாளரான ஹேமந்திடம் மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் எஸ்.பி நேரில் விசாரணை நடத்துகின்றனர். போதை தலைக்கேறிய தேர்தல் பார்வையாளர் 9 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அரியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தேர்தல் அதிகாரி ஹேமந்த் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு தொடர்ந்து துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election officer ,Ariyalur ,sky , Case record, election, IPS, officer, alcoholism
× RELATED ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனையில் ரூ.51,000 பறிமுதல்