×

6 முதல் 16 ம் தேதி வரை டிடிவி தினகரன் 2ம் கட்ட பிரசாரம்: அமமுக அறிவிப்பு

சென்னை:  அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 6 முதல் 16ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2 கட்ட பிரசாரம் செய்ய உள்ளார்.இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கை:அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 6 முதல் 16ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். அதன்படி 6ம் தேதி மதுரை,  விருதுநகர், தென்காசி, 7 ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, 8ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், 10ம் தேதி தஞ்சாவூர், நாகை, 11ம் தேதி மயிலாடுதுறை, சிதம்பரம், 12 ம் தேதி பாண்டிச்சேரி, கடலூர், 13ம் ேததி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை, 14ம் தேதி வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, காஞ்சிபுரம், தென் சென்னை, பெரும்புதூர், 16ம் தேதி வட சென்னை, தென் சென்னை, மத்திய  சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் அவர்  பிரசாரம் செய்ய உள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TDV Dinakaran ,phase ,Amagam , DTV Dinakaran. 2 promotion. campaign
× RELATED ககன்யான் திட்டத்துக்கான 3ம் கட்ட சோதனை வெற்றி