×

எமிசாட், 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி-சி 45 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: இஸ்ரோவின் மினி சாட்டிலைட்டான ‘எமிசாட்’ மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 வணிக ரீதியான செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் உதவியுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்  (இஸ்ரோ) நாளை காலை 9.30 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை தயார் செய்து அவற்றில் செயற்கைக்கோள்களை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது.  அந்தவகையில் கடந்த ஜனவரி 24ம் தேதி கலாம் சாட், மைக்ரோசாட்-ஆர் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்தநிலையில், இந்தியாவின் மினி செயற்கைக்கோளான ‘எமிசாட்’ மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களை ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது  ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ நாளை காலை 9.30 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதில், அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள்கள் மற்றும்  லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த மொத்தம் 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட உள்ளது.  

பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்படும் இந்தியாவின் ‘எமிசாட்’ செயற்கைக்கோள் 749 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் மொத்த எடை 436 கிலோ. எமிசாட்  செயற்கைக்கோளானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டிற்கு உதவும். இதேபோல், 28 வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 3  வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும், பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் பி.எஸ்.எல்.வி ரகத்தில் 47வது ராக்கெட் ஆகும். இந்த ஆண்டின் 2வது ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 71வது ராக்கெட் இதுவாகும்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Emisad,, 28 foreign ,satellites, PSLV-C 45 rocket
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...