×

மதுரை மல்லி... வளைகுடாவில் ‘கில்லி’

துபாய்: மதுரை மல்லியின் மணம் உலக புகழ் வாய்ந்தது. மணம் கமழும் மதுரை மல்லிகையின் வாசத்திற்கு மயங்காதவர்கள் வெகு குறைவு. வளைகுடா பகுதியில் மதுரை மல்லிகையின் மணத்திற்க்கு பெரும் நல்ல  வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக யுஏஇ நாட்டின் துபாய்,ஷார்ஜா,அபுதாபி நகரங்களில் மதுரை மல்லிகை  தமிழகத்தில்  கிடைப்பது போன்று நாள்தோறும்  விற்பனைக்கு வருகிறது.இந்தியர்கள் மட்டுமில்லாது அரபு நாடுகளை சேர்ந்தவர்களும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கான அலங்காரங்கள்,வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மதுரை மல்லிகையை  அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள். மல்லிகை மலர்களை  மதுரையிலிருந்து அதிகளவில் துபாய்க்கு இறக்குமதி செய்து விற்பனை செய்து வரும் தமிழகத்தை சேர்ந்த‌ பெருமாள் என்பவர் 32 ஆண்டுகளுக்கும் முன் துபாயில் ஒரு மலர் கடையில் தொடங்கி தற்போது 12 கிளைகளை  வரை  நடத்தி வருகிறார்2017ல் மதுரை விமான நிலையத்தில் மதுரை - துபாய் சர்வதேச‌ சரக்கு போக்குவரத்தை தொடங்கிய போது முதல் சரக்காக மதுரை மல்லி உள்ளிட்ட 300 கிலோ மலர்களை துபாய்க்கு இவர்  இறக்குமதி செய்தார் என்பது குறிப்பிட தக்கது,தமிழகத்திலிருந்து யுஏஇ வரும் இந்த மல்லி இரண்டு நாட்கள் வரை வாடாமல் இருக்கும் ஆனால் அதற்குள் விற்று தீர்ந்து விடுகிறது என்கிறார்.

இது குறித்து மலர் வியாபாரி பெருமாள் கூறியதாவது: ஆரம்பத்தில் குறைந்தளவில் இறக்குமதி செய்யப்பட்ட மல்லி  படிப்படியாக உயர்ந்து தற்போது நாளொன்றுக்கு மதுரை மல்லி மட்டும் 300 கிலோ யுஏஇக்கு இறக்குமதி செய்து வருகிறேன்.சீசன் சமயத்தில் இது அதிகரிக்கும் இது தவிர்த்து மற்ற மலர்கள் என நாளொன்றுக்கு 1 டன் மலர்கள் இறக்குமதி செய்கிறேன். மதுரை விமான நிலைய சர்வதேச சரக்கு சேவையில் காய்கறிகள் வருவதால் விமானத்தில்  இடப்பற்றாக்குறை காரணமாக திருச்சி,கோவை ,பெங்களூர் விமான நிலையம் வழியாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதலாக விமானங்களை இயக்கினால் மற்ற விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை மதுரையிலிருந்தே இறக்குமதி செய்து கொள்ளலாம். இதன் மூலம்  தென்மாவட்டங்களில் ஏற்றுமதி அதிகரிக்கும். மேலும் மதுரை மல்லிக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் வரவேற்பு உள்ளது. இந்திய அரசு கவனம் செலுத்தினால் மதுரை மல்லி விவசாயத்தை அதிகப்படுத்தி இந்தியாவிற்கு அந்நிய  செலவானி கிடைக்க வழி செய்யலாம் என்றார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gulf of Gilli , Madurai Malli,Gulf, Gilli
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...