×

வந்தாரை வரவேற்கும் மண்ணின் மைந்தர்கள்

சூரத்தில் மண்ணின் மைந்தர்களுக்கும், வந்து குடியேறியவர்களுக்கும் மக்களவையில் போட்டியிடுவது தொடர்பாக பிளவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சமூக ரீதியாக ஒன்றாக இருந்தாலும், அரசியல் ரீதியாக பிரிந்துள்ளனர்.வட இந்தியாவிலிருந்து சூரத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் 1960ம் ஆண்டுகளில் விசைத்தறிகளை தொடங்கினர். 1970களில் சவுராஷ்டிரா பகுதி மக்கள், சூரத்தில் செட்டிலாகி வைரம் பாலிஷ் செய்யும் ஆலைகளில் கூலி  தொழிலாளிகளாக வேலைக்கு சேர்ந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் வெளியிலிருந்து வந்து சூரத்தில் குடியேறியவர்கள் இமாலய வளர்ச்சி பெற்றனர். தொழிலில் மட்டுமல்லாது, அரசியல் ரீதியாகவும் வளர்ச்சி பெற்றனர்.  அவர்களின் மக்கள் தொகை இரு மடங்காகி விட்டது. சூரத்தின் மக்கள் தொகையில் 35 சதவீதம் கொண்ட அவர்கள், வைரம், டெக்ஸ்டைல் மற்றும் பிற தொழில்களிலும் கோலோச்சுகின்றனர். அவர்கள் மண்ணின் மைந்தர்களோடு  இணைந்து பல சமூக மற்றும் மத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து படேல் சமுதாய தலைவரும், அம்ரேசி மாவட்டம், பாப்ரா டவுனை சேர்ந்தவருமான கஞ்சிபாய் பலாலா கூறுகையில், ‘‘சூரத்தின் மண்ணின் மைந்தர்களுக்கும், படேல் சமுதாயத்தினருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இயல்பிலேயே படேல் சமுதாயத்தினர் மிகவும் சுறுசுறுப்பானவர்கள் என்பதால் தொழிலில் முன்னேறியுள்ளனர். ஆனால், இரு சமூகமும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம்.’’ என்றார்.சூரதீஸ் சமூகத் தலைவரும், தொழிலதிபருமான சரத்காடியா கூறுகையில், ‘‘வெளி சக்திகள் இரு சமூகத்தினரையும் பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றன. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. தற்போது இரு  சமூகங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்கின்றனர். அவர்களை பிரிக்க முடியாது’’ என்றார்.சமூகவியலாளரும், சூரத்தின் மண்ணின் மைந்தருமான டாக்டர் முகுத் ஜோக்ன்ஸி கூறுகையில், ‘‘வெளியிலிருந்து இங்கு குடியேறியவர்களை சூரத்தின் மண்ணின் மைந்தர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இதனால்தான் அமைதியும்,  செழிப்பும் நிலவுகிறது. ஆனால் தற்போதை அரசியல் சூழ்நிலை, இந்த அமைதியை பாதிக்கிறது. இதை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். மககளும் இதை உணர்ந்துள்ளனர். மற்றபடி இரு  சமூகங்களுக்கு  இடையே, தொழில் ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ, எந்த மோதலும்  இல்லை.’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sons ,Vandar , The sons,soil,welcomes ,Vandar
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி