×

வெற்றி மேல் வெற்றி குவித்த சென்டிமென்ட் ஜெயலலிதாவின் ராசி பங்களாவில் குடியேறினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதிமுக பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் ராசியான வீடு என்றழைக்கப்படும் தேனியில் உள்ள சிங்கப்பூர் பங்களாவில் காங்கிரஸ் கட்சியின் தேனி மக்களவை வேட்பாளர் ஈவிகேஎஸ்  இளங்கோவன் குடியேறினார்.
கடந்த 2002ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். இதையடுத்து தேனியில் குடியேற அவர் திட்டமிட்டார். அங்குள்ள சிங்கப்பூர் பங்களா போயஸ்கார்டன் பங்களா போல உள்ளதால், அதை வாடகைக்கு எடுத்து குடியேறினார் ஜெயலலிதா. அவர் ஆண்டிப்பட்டி பிரசாரத்துக்கு  வந்தபோதும், வெற்றி பெற்ற பிறகு நடக்கும் விழாவுக்கு வரும்போதும், சிங்கப்பூர் பங்களாவில்தான் தங்குவார்.அதன் பின் 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இதே பங்களாவில் இருந்து தான் வாக்கு சேகரித்தார் வெற்றியும்  பெற்றார். அப்போது அதிமுக ஆட்சியை இழந்தாலும், அதிக எம்எல்ஏக்களுடன் எதிர்கட்சிதலைவர் ஆனார்.

இப்பகுதியில் இந்த பங்களாவை பார்த்து செல்லும் மக்கள் ஜெயலலிதா வீடு என்று தான் அழைப்பார்கள். இந்த வீட்டின் முன்பு காத்திருந்த பலர் அமைச்சர்கள் ஆனார்கள். ஏன் முதல்வராக பதவி ஏற்ற பன்னீர்செல்வமும், இந்த  வீட்டின் முன்பு நின்றவர்தான். இதனால் இந்த பங்களாவை ராசியானதாக எல்லோரும் கருதுவார்கள்.இந்த வீட்டில் ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் குடியிருந்ததில்லை. ஜெயலலிதா வாழ்ந்த வீடு என்பதால், கோயிலாக  பார்ப்பதாக அதிமுகவினர் கூறி வந்தனர்.இந்த தேர்தலில் இந்த வீட்டை ஓ.பன்னீர்செல்வம் கண்டு கொள்ளவில்லை. இதனால், ராசி குறித்து தெரிந்ததும், இவ்வீட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  குடியேறிவிட்டார். ஜெயலலிதாவுக்கும், அதிமுகவிற்கும் சென்டிமென்ட்டாக ராசியான வீடு என்று இருந்த பங்களா பறிபோய்விட்டதே என தற்போது அதிமுகவினர் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.ஜெயலலிதாவுக்காக பங்களா முன்பு கம்பீரமாக காத்து கொண்டிருந்த பிரச்சார வாகனம் காங்கிரஸ் கொடியுடன் நின்று கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து ஏக்கத்துடன் பார்த்து செல்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Victory ,Jayalalithaa ,Rasi Bungalow , Sentiment , victory ,victory Jayalalithaa's ,Rasi Bungalow
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...