×

‘பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு’ பாமகவுக்கு ஆப்பிள் சின்னத்துல ஓட்டு போடுங்க..... சிரிக்க வைத்த திண்டுக்கல் சீனிவாசன்

கன்னிவாடியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளருக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘ஆப்பிள்’ சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மாற்றி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான பாமக வேட்பாளர் ஜோதிமுத்து அறிமுக கூட்டம் கன்னிவாடியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘ஜோதிமுத்துவை ஆதரித்து ஆப்பிள் சின்னத்தில் அனைவரும் ஓட்டளியுங்கள்’’ என்றார். இதை கேட்டு கூட்டத்தினர் உடனே கத்தினர். பேச்சை நிறுத்திய அமைச்சர், ‘‘என்னங்க.. என்னங்க..’’ என்று சத்தமிட்டு கேட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள், ‘‘வேட்பாளரின் சின்னம் ஆப்பிள் இல்லை.

மாம்பழம்’’ என்றனர். இதை கேட்டு, ‘‘அச்சச்சோ...’’ என தனக்குத்தானே தலையில் அடித்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும், ‘‘மாம்பழத்துக்கு ஓட்டு போடுங்க’’ என்றார். மேடையில் அமர்ந்திருந்த ராமதாஸ், அருகில் இருந்த நத்தம் விஸ்வநாதனிடம், ‘‘என்ன சொன்னாரு?’ என்று கேட்க, நத்தம் விஸ்வநாதன், ‘‘வழக்கம்போல மாம்பழத்துக்கு பதில் ஆப்பிள்னு சொல்லிட்டாரு’’ என்றதும், மேடையிலேயே அடக்க முடியாமல் ராமதாசும் வாய்விட்டு சிரித்தார். திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் கூட்டத்தில் மட்டுமல்லாது, மேடையிலும் சிரிப்பலை ஓய வெகுநேரமானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sin ,dindukal srinivasan , Dindigul Srinivasan, admk, pmk,
× RELATED அக்சாய் சின் மற்றும் அருணாச்சல...