×

ரூ.6078 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தகவல்

சென்னை: தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மடிப்பாக்கம் கூட்ரோடு, உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது ஜெயவர்தன் பேசியதாவது: தென் சென்னை தொகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெம்மேலியில் 100 எம்எல்டி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும் நெம்மேலியில் 150 எம்எல்டி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி இசைவு பெற்றதால், அத்திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படவுள்ளது. மேலும் பேரூரில் 400 எம்எல்டி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ.6078 கோடியில் செயல்படுத்த ெதாடர்ந்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தியதனால்  ஆயத்தப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சோழிங்கநல்லூர் வருவாய் தாலுகாவை சென்னை மாவட்டத்துடன் இணைக்க தொடர்ந்து முதல்வரை வலியுறுத்தி, சோழிங்கநல்லூர் வருவாய் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு சென்னை வருவாய் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும்பொருட்டு வார்டு, மண்டலம் வாரியாக அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு தெரு, தெருவாக நடந்தும், குறைதீர்க்கும் முகாம் ஏற்படுத்தியும், மக்களின் குறைகளை போக்கும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு ஜெயவர்தன் பேசினார். பிரசாரத்தின்போது, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள்  மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ.  சுந்தரம்,  மா.தனபால், எம்.சி.முனுசாமி, பெரும்பாக்கம் ராஜசேகர், டி.சி  கோவிந்தசாமி, என்.சி. கிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் ஜே.கே.மணிகண்டன்,  ஜே.கே.பர்மன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார்,  தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம்  முருகன், சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஜெகன்,  புரட்சிபாரதம் ஆதிவேந்தன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த  தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayawardene ,AIADMK , Seawater, AIADMK, Jayawardan
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...