×

ஐபிஎல் 2019: மயங்க், கெய்ல் அதிரடி; ராகுல் நிதானம்; மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

மொகாலி: ஐபிஎல் இன்றைய போட்டியில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா - டி காக் ஜோடி அதிரடியாக விளையாடியது. இந்த ஜோடி 5.2 ஓவர்களில் 51 சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 32 ரன்கள் எடுத்து வில்ஜோன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்களிலும், யுவராஜ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய டி காக் அரைசதம் விளாசினார். 39 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களில் மும்பை அணி விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி பந்து வீச்சில் முருகன் அஸ்வின், ஷமி, வில்ஜோன், தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல் - ராகுல் களமிறங்கினர். கெய்ல் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய மயங்க் அகர்வால் மும்பை அணி பந்துவீச்சை சிதறடித்தார். அவர் 21 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு புறம் நிதானமாக விளையாடி ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,Mayank ,Rahul ,Mumbai ,Punjab , IPL 2019, Cricket, Punjab, Mumbai
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி