×

காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் வாகன அணிவகுப்பின் அருகே வெடித்துச் சிதறிய கார்: தீவிரவாத தாக்குதலா என விசாரணை!

ராம்பான்: காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பயணித்த பேருந்தின் அருகே கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் இன்று காலை சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 10 பேருந்துகளில் தங்கள் முகாம் நோக்கி சென்றுகொணடிருந்தனர். காலை 10.30 மணியளவில் பனிஹல் நகரில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இதனால் பாதுகாப்பு வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. அதில் ஒரே ஒரு பேருந்தின் பின்பகுதி மட்டும் லேசாக சேதமடைந்தது. ஆனால், பேருந்தில் பயணித்த சி.ஆர்.பி.எப் 54வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த வீரர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். இன்று வெடித்த காரிலும் வெடிகுண்டுகள் மற்றும் ரசாயன பொருட்கள் ஏற்றி வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. காரில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்து, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் இடம்பெயரும்போது வழியில் தனியார் வாகனங்கள் செல்ல ஜம்மு காஷ்மீரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, புல்வாமா பாணியில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தா? அல்லது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14ம் தேதி, புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அவந்திபுரா அருகே சி.ஆர.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் தீவிரவாத தாக்குதலாலுக்கு இலக்கானது. இதில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து புல்வாமா தாக்குதல் பாணியில் மீண்டும் ஒரு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terrorist attack ,CRPF ,Kashmir ,Investigation , Kashmir, CRPF, car, bomb, terrorist attack
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி