×

எனது சொத்துகள் முடக்கப்பட்டது புதிய செய்தி அல்ல, 6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு: கார்த்தி சிதம்பரம் விளக்கம்

புதுடெல்லி: எனது சொத்துகள் முடக்கப்பட்டது புதிய செய்தி அல்ல; 6 மாதங்களுக்கு முன்பே பிறப்பித்த உத்தரவு என்று கார்த்தி சிதம்பரம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை செய்து வருகிறது. அதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேலும் 3 வர்த்தக நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருள் நடராஜன் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கியதாக இன்று வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல இது பழைய செய்தி. 6 மாதங்களக்கு முன்பே பிறப்பித்த உத்தரவை, தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அவ்வவுதான். இது நீதிமன்த்தின் உத்தரவு அல்ல. மேலும் இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே இன்றும் இருக்கிறது. இதை எதிர்த்து திரு.கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karthi Chidambaram , Property Freezing, Karthi Chidambaram, INNS Media, Enforcement Department
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...