×

திம்பம் மலைப்பாதையில் சூரிய சக்தியில் இயங்கும் ஒளிரும் மின்விளக்குகள்

சத்தியமங்கலம் : திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.  இம்மலைப்பாதை வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்திற்கு இடையே பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துகளை தடுக்க  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது மலைப்பாதையில் ஆங்காங்கே சூரிய சக்தியில் இயங்கும் ஒளிரும் வகையிலான மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த மின்விளக்குகள் இரவு மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், திம்பம் மலைப்பாதையில் விபத்து குறையும் வாய்ப்பு உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mountain range ,Thimphu , Raod,Timpum ,Mountain road,Solar Lamps
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...