×

அருப்புக்கோட்டையில் 20 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள்

*சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நடவடிக்கை
* முதற்கட்டமாக 4 இடங்களில் பணி தொடக்கம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க, 20 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக 4 இடங்களில் பணி தொடங்கியுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு தாமிரபரணி, வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறையால், தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் குடிநீரை ஒரு குடம் ரூ.10க்கு பொதுமக்கள் விலைக்கு வாங்கி குடிக்கின்றனர். நகர் முழுவதும் 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் டிராக்டர்கள் மூலம் குடிநீரை விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில், அருப்புக்கோட்டை பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, நகராட்சி மூலம் வாழவந்தம்மன் கோயில் தெரு, எஸ்பிகே பள்ளி ரோடு, நகராட்சி சுகாதார பிரிவு அலுவலகம், காந்தி மைதானம், பாரதி நகர், டெலிபோன் ரோடு, கொண்டலம்மாள் கோயில் தெரு, தேவாடெக்ஸ் காலனி, அன்புநகர், ராமசாமிபுரம் காலனி, தும்பைக்குளம் கண்மாய், நேருநகர், கொண்டலம்மன் கோயில் தெரு, மகாளியம்மன் கோயில் தெரு, நேதாஜி ரோடு, பழைய பேருந்து நிலையம், பட்டாபி ராமர் கோவில் தெரு, இளைஞர் சங்கம் தெரு உட்பட 20 இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இடங்களில் நகராட்சி மூலம் 600 அடி ஆழத்தில் போர்வெல் அமைத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இந்த பணியை தனியார் மேற்கொள்ளும். இதன் மூலம் நீரை ரூ.20 லிட்டர் 7 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் 1 ரூபாய்க்கும் விற்பனை செய்ய நகராட்சி நிர்ணயம் செய்துள்ளது. இதனடிப்படையில் முதற்கட்டமாக வாழவந்தம்மன் கோயில் தெரு, எஸ்பிகே பள்ளி ரோடு, நகராட்சி பூங்கா, காந்தி மைதானம், பாரதிநகர் ஆகிய 4 இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

விரைவில் அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்படும். ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் 10 ஆண்டு காலம் வரை பராமரிக்க வேண்டும். அதன்பின்னர் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே நகராட்சி நிர்வாகம் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : refineries ,Aruppukkottai , supply water,people,refineries ,Aruppukkottai
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...