×

மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதால் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்..: வெற்றிமாறன் உள்பட 111 இயக்குநர்கள் கூட்டறிக்கை

சென்னை: மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதால் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று வலியுறுத்தி திரைப்பட இயக்குநர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கையில் முன்னனி இயக்குநர் வெற்றிமாறன் உள்பட 111 இயக்குநர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அபாயகரமான மோடி அரகுசு மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடாது என்று அறிக்கையில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். புவியியல் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களாக பிரிந்திருந்தாலும், பல்வேறு கலச்சாரங்களுடன் கோடிக்கணக்கான மக்கள் ஒற்றுமையுடன் வாழும் அழகான நாடு இந்தியா என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஃபாசிச சக்திகளால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால், அதனை தடுக்க, தவிர்க்க மக்களவை தேர்தல் தான் கடைசி வாய்ப்பு என்று திரைப்பட இயக்குநர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.

2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு கும்பலாக திரண்டு கொலை செய்வது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டு மக்களிடையே மத்தப்பிரிவினையை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இணையம் வழியாக சமூகவலைதளங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகவும் திரைப்பட இயக்குநர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களை எதிர்த்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூட்டறிக்கையில் திரைப்பட இயக்குநர் கோபி நயினார், ஆவணப்பட இயக்குநர்கள் லீனா மணிமேகலை, அனந்த் பட்வர்தன், மலையாள பட இயக்குநர் ஆஷிக் அபு உள்ளிட்டோர் கையொப்பமிட்டுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Modi ,Directors ,Vetrimaran , Modi, Prime Minister, BJP, Lok Sabha election, Vetrimaran, directors,filmmakers
× RELATED பழங்குடியின பெண்ணை குடியரசுத்...