×

12 தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு மும்பை வடக்கில் ஊர்மிளா, சாசாராமில் மீரா குமார்

புதுடெல்லி: மும்பை வடக்கு தொகுதி வேட்பாளராக நடிகை ஊர்மிளா, பீகாரின் சாசாராம் தொகுதியில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து மற்றொரு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இதில் உத்தரப் பிரதேசம் 1, பீகார் 4, ஒடிசாவை சேர்ந்த 7 தொகுதி உட்பட 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியலில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை ஊர்மிளா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், மும்பை வடக்கு மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல், பீகாரின் சாசாராம் தொகுதியில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மகாராஜ்கன்ஜ் தொகுதி வேட்பாளர் தனு திரிபாதி மாற்றப்பட்டு, சுப்ரியா நேத் நிறுத்தப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nominees ,Congress ,constituencies ,Meeram Kumar ,Urmila ,Mumbai ,Sasaram , Congress candidates for 12 constituencies, Urmila and Meera Kumar
× RELATED காங்கிரஸ் கட்சிக்கும், சீன...