×

சால்வை வேண்டாம் ஆதரவு மட்டும் போதும்: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

சென்னை: சால்வை வழங்க வேண்டாம். எனக்கு ஆதரவு மட்டும் தாருங்கள் என்று பெண்களிடம் தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்து ஆதரவு திரட்டினார்.தென் சென்னை நாடாளுமன்றத்தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், நேற்றுக் காலை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலையிலிருந்து, பிரச்சாரத்தைத் தொடங்கி காமராஜர் காலனியில் உள்ள 1, 2, 3வது  தெருக்கள் வழியாக ரங்கராஜபுரம், என். டி.ஆர் தெரு,  புலியூர் புரம்,  ஜக்காரியா காலனி, அக்பராபாத் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.  தொடர்ந்து கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தொடங்கி சேர்க்காள் தோட்டம் குடிசைப் பகுதி மக்களிடமும், அஜீஸ் நகர் சின்னராஜ் பிள்ளை தோட்டம் பகுதியில் வாக்குகள் சேகரித்தார்.  மாலையில் வடபழனி முருகர் கோயிலை ஒட்டியுள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் அருகில் பிரச்சாரத்தை தொடங்கி, மசூதி தெரு வழியாக சென்றார், அங்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய மக்களிடம் தனக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் பதிலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர்,  ஆண்டவர் கோயில் தெரு மற்றும் அழகிரி நகர் பகுதியில் உள்ள தெருக்கள், வன்னியர் தெரு, மன்னார் பகுதி, அழகர் பெருமாள் கோயில் தெரு வழியாக  என்.ஜி.ஓ. காலனி சிவன் கோவில் தெருவில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார் பிரச்சாரத்தின் போது அப்பகுதி வாழ் மக்கள் ஆரத்தி எடுத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். சால்வை அணிவிக்க வந்தவர்களை தடுத்து, சால்வை வேண்டாம் என்று கூறி கைகுலுக்கி வாழ்த்து பெற்றார். அம்மன் கோவில்கள் அதிகமுள்ள வடபழனியில் கோவில் அர்ச்சகர்கள் ஆர்வத்தோடு கோயில் பிரசாதங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். வேட்பாளர் தன்னுடன் வந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வாகனங்களில் செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

பட்டாசு வெடித்து வரவேற்பு வழங்கிய தொண்டர்களிடம் யாரும் தற்போது பட்டாசு வெடிக்க வேண்டாமென்றும், வெற்றி பெற்றவுடன் மொத்தமாக பட்டாசு வெடித்து மகிழ்வோம் என்று உற்சாகப்படுத்தினார். பிரச்சாரத்தில் வேட்பாளருடன் தி.மு.க. நிர்வாகிகள் பழனி கிராமணியார், பொன்னுரங்கம், ஜெ.கருணாநிதி, ஏழுமலை, சாந்தி பங்காரு, கமல், முகமது யூசுப் ஆகியோர் உடன் சென்று பொதுமக்களிடம் வாக்குகளை திரட்டினர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu Thangapandian ,Shalvi ,DMK , DMK candidate, Tamilnadu Thangapandian
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...