×

இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் அரசியலுக்கு வரவேண்டும்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேச்சு

சென்னை: இளை ஞர்கள், ஐடி ஊழியர்கள்  அரசியலுக்கு வரவேண்டும் என்று தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் சென்னையில் அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்கிறார். இவருக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்துள்ளார். இவர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். தற்போது பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்தநிலையில், தரமணியில் உள்ள ராமானுஜம் ஐடி பார்க்கில் உள்ள இன்ஜினியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது, “இளம் இந்திய குரல்” என்ற சின்னத்தை தி ரிவர் - என்ஜிஓ நிறுவனர் டாக்டர் மது சரண் அறிமுகப்படுத்தினார். அப்போது, தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தனும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

ஏன் இளைஞர்கள் அரசியலில் வர வேண்டும். நான் மருத்துவராக இருக்கிறேன். மருத்துவமனையும் கட்டியுள்ளேன். தினமும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறேன். ஐடி நிறுவனம் குறித்த ஆணையத்தில் உறுப்பினராக இருந்துள்ளேன். இதனால் ஐடி பணிகள் குறித்து எனக்கு முழுமையாக தெரியும். அதனால், இளைஞர்கள் குறிப்பாக  ஐடி ஊழியர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நீங்கள் நீதிகாக போராட வேண்டும்.
தென் சென்னை, தொகுதியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பிரச்னைக்கு தீர்வுகாண முயற்சித்து வருகிறேன். பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்க காரணமாக இருந்துள்ளேன். மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஐ.டி. ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எளிதாக தொடர்புகொள்வதற்காக ஐடி பணிகளுக்கு ஒரு பிரத்யேக திட்டம் ஒன்றைச் செயல்படுத்தப் போகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். அவரது பேச்சு இளைஞர்களுக்கு உணர நிறைய நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தது என்று கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IT employees ,Jayawardene ,AIADMK , Youth, IT employees, AIADMK candidate Jayawardena
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...