×

இந்தியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி, காஷ்யப்

புதுடெல்லி: இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்திய வீரர்கள் கிடாம்பி காந்த், பாருபள்ளி காஷ்யப் தகுதி பெற்றனர். கால் இறுதியில் சக வீரர் சாய் பிரனீத்துடன் மோதிய காந்த் 21-23, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் 62 நிமிடம் போராடி வென்றார். அவர் கடைசியாக விளையாடிய 9 தொடர்களில் 8 முறை கால் இறுதியுடன் வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கால் இறுதியில் காஷ்யப் 21-16, 21-11 என்ற நேர் செட்களில் சீன தைபே வீரர் வாங் ட்ஸூ வெய்யை வீழ்த்தினார். காஷ்யப் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2 இந்திய வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : semi-finals ,Kashyap , India Open Badminton, Kitampi, Kashyap
× RELATED ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் நடாலை...