×

பைனலில் பிளிஸ்கோவா: பெடரர் முன்னேற்றம்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். அரை இறுதியில் 2வது ரேங்க் வீராங்கனை சிமோனா ஹாலெப்புடன் (ரோமானியா) மோதிய பிளிஸ்கோவா (7வது ரேங்க்) 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி (11வது ரேங்க்) 6-3, 6-3 என்ற நேர் செட்களில் அமெட் கோன்ட்டாவெய்ட்டை (எஸ்டோனியா, 19வது ரேங்க்) வீழ்த்தினார். பைனலில் பிளிஸ்கோவா - பார்தி மோதுகின்றனர்.  ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் கனடாவின் டெனிஸ் ஷபோவலாவ் 6-7 (5-7), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியபோவை (அமெரிக்கா) வென்றார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Picasso , பிளிஸ்கோவா,பெடரர்
× RELATED பிகாசோ ஓவியம் தான் பிரியாமல் நம்முடன்... இன்று (அக்.25) பிகாசோ பிறந்தநாள்