×

ஜெயப்பிரதா பற்றி அவதூறு சமாஜ்வாடி தலைவர் மீது வழக்கு

பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா தமிழில் சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும், தசாவதாரம் உள்பட பல படங்களிலும் தென்னக மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். . 1994ல் என்.டி.ராமராவின் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தா–்ர். பின்னர் சந்திரபாபு நாயுடு பிரிவில் இணைந்து, 1996ல் மாநிலங்களவைக்கு தேர்வானார். நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமாஜ்வாடியில் சேர்ந்தார். உபி. மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் 2004 மற்றும் 2009ல் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். கடந்த வாரம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சேர்ந்த வேகத்திலேயே ராம்பூர் தொகுதி பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுபவர் அசம் கான். தங்கள் கட்சி சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு எம்பி. ஆன ஜெயப்பிரதா இப்போது பாஜ சார்பில் எதிராக போட்டியிடுவது சமாஜ்வாடி கட்சியினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் சம்பல் மாவட்ட சமாஜ்வாடி தலைவர் பெரோஸ் கான் ஒருபடி மேலே போய், ‘ராம்பூர் தொகுதி மக்களே... உங்களுக்கு இனி சாயங்காலம் கிளுகிளுப்புதான்.. கொண்டாட்டம்தான்..’ என  பாலியல்  ரீதியாக விமர்சித்தார்.
 இந்த சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பெரோஸ்கானுக்கு கடும் கண்டனம் வந்தது. பதறிப்போன அவர், ‘நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை புகழும் விதத்திலேயே பேசினேன்..’ என்றார்.  இப்போது பெரோஸ்கான் மீது போலீஸ் வழக்குப் போட்டுள்ளது. நிலைமை விபரீதமாக போவதை அறிந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பெண்களை குறித்து தவறாகவோ, கண்ணியக்குறைவாகவோ விமர்சிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samajwadi ,Jayaprada , Jayaprada, leader of the Samajwadi Party, case
× RELATED காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள்...